Writings
Tuesday, 17 March 2020
Beyond the stars
Sunday, 15 April 2018
Sunday, 4 March 2018
இன்றே எழு!
உனக்கு முதுகெலும்பு கொடுத்தது
முடங்கிக் கிடக்க அல்ல
கண்கள் கொடுத்தது
கலங்கி நிற்க அல்ல
கைகள் கொடுத்தது
கைகட்டிக்கொள்ள அல்ல
கால்கள் கொடுத்தது
குத்திட்டு அமர அல்ல
உன் மூளையொன்றும்
குப்பைத்தொட்டி அல்ல
இதயம் கொடுத்தது
ஏங்கித் தவிக்க அல்ல
உன் நரம்புகள் துடிக்க
இன்றே எழு
புது சரித்திரம் படைக்க!
Sunday, 11 February 2018
Monday, 5 February 2018
Monday, 15 January 2018
இன்றைய கல்வி
இன்றைய கல்வி...
சருகுகளை இலையாக்க முயற்சிக்கிறது
புலியை வலைதொடுத்து அடக்குகிறது
தேனீக்களை விவரிக்கும் அதே கல்வி
எம் மனத்தேனீக்களுக்கு ஏனோ
மரணம் தர விழைகிறது....
புத்தகம் புதைகுழியாகுமா? ஆகும்
இன்றைய பாடப்புத்தகங்களே சாட்சி
ஒருவேளை தேர்வுக்காக இல்லாமல்
தாகம் கொண்டு படித்திருந்தால்-அது
தித்திக்கும் தண்ணீராகியிருக்கலாம்
ஆனால்.......அது
கானல் நீராகவல்லவா ஆகிப் போனது?
எங்கள் மனவளத்தையல்லவா அது
களவாடிப்போனது.....?
எம்மைப் புத்தகத்துக்குள் இழந்தோம்
மனம் மயங்கிப்
படிக்கப்படவேண்டிய புத்ததகங்கள்
எங்களுக்கு ஏனொ மயக்க மருந்தே கொடுத்தன.....!
மனப்பாடக் கல்வி ஒழிந்தால்
இந்த மயக்கம் தெளிய வாய்ப்புண்டு...!
-ச.பவித்ரா
கோவை
Sunday, 7 January 2018
Beyond the stars
The stars are high Leaving me with a sigh Dark is the universe around Spark within me means so profound Opacarophile as I have been Houndin...
-
The stars are high Leaving me with a sigh Dark is the universe around Spark within me means so profound Opacarophile as I have been Houndin...
-
உனக்கு முதுகெலும்பு கொடுத்தது முடங்கிக் கிடக்க அல்ல கண்கள் கொடுத்தது கலங்கி நிற்க அல்ல கைகள் கொடுத்தது கைகட்டிக்கொள்ள அல்ல கால்கள் கொட...